தி.மு.க. மாநில மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி நியமனம்
- தி.மு.க. மாநில மாணவரணி தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் இரா.ராஜீவ் காந்தி. சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான இவர் தி.மு.க.வின் மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இவருடைய கட்சி பணிகள் மிகச் சிறப்பாக இருந்து வந்துள்ளன. இவருடைய செயல்பாடுகள் குறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் ராஜீவ் காந்தியைப் பாராட்டி வாழ்த்தி பேசியுள்ளார்.
மாணவர் இயக்கங்களை ஒன்றிணைத்து செயல்பட க்கூடிய திறமை மிக்கவரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் கட்சி பணியை பாராட்டி தற்போது அவரை மாநில மாணரவணி தலைவராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து சென்னை யில் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரக்கூடிய ராஜீவ்காந்தி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் தோறும் இளைஞர் அணி என்ற திட்டத்தின் மூலம் இளைஞர் அணியில் சேரும் உறுப்பினர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை மூலம் தி.மு.க.வின் கொள்கை, வரலாற்று சாதனைகள் குறித்து மாவட்டங்கள் தோறும் நடத்தி வந்த திராவிட மாடல் நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி பேசினார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று திராவிட ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.
மாநில மாணவரணி தலைவராக அறிவிக்க ப்பட்ட இரா.ராஜீவ் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இதுபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை வாழ்த்துக்களை பெற்றார்.
ராஜீவ் காந்தி கட்சியில் இணைந்த சில வருடங்களில் அவரது அயராது கட்சி பணி மூலம் தி.மு.க.வில் உயர்ந்த பதவி வழங்கியிருப்பது வரவேற்பு பெற்றுள்ளன. தி.மு.க.வின் மாநில மாணவரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நேரிலும் மற்றும் வலைதளங்களிலும் பாராட்டுக்களும், வாழ்த்து க்களும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.