உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-19 07:31 GMT   |   Update On 2023-07-19 07:31 GMT
  • அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதி யகளுக்கும் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ. 7,850 நிர்ணயம் செய்து அங்கன்வாடி, சத் துணவு, தலையாரிகள், ஊராட்சி செயலர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவுத் தொகை வழங்காமல் இருக் கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நட வடிக்கை எடுத்து செலவு தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளா ளர் முருகேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புஷ்பராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சே கர், அரசு கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெனி ஸ்டா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு, அரசு போக்குவரத்துக் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செய லாளர் பவுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News