உள்ளூர் செய்திகள்

கடலாடி அருகே பசுமாடுகள் சாவு

Published On 2022-11-20 08:25 GMT   |   Update On 2022-11-20 08:25 GMT
  • கடலாடி அருகே பசுமாடுகள் இறந்தன.
  • இளஞ்செம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஒரு வானேந்தல் ஊராட்சி தேவர் குறிச்சிகிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவர் பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்ட மாடுகள் வீடு திரும்பவில்லை.

அப்போது கடலாடி பொதிகுளம் சாலையில் வயல் காட்டில் 2 மாடுகள் இறந்து கிடந்தன. மாடு தண்ணீர் குடித்ததில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற கோணத்தில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் அழகர்சாமி புகார் செய்தார். இளஞ்செம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News