உள்ளூர் செய்திகள்

குருமிலாங்குடியில் தேவாலய சப்பரபவனி திருவிழா

Published On 2023-08-22 12:21 IST   |   Update On 2023-08-22 12:21:00 IST
  • தொண்டி அருகே குருமிலாங்குடியில் தேவாலய சப்பரபவனி திருவிழா நடந்தது.
  • மாலை சப்பரப்பவனி நிறைவு திருப்பலி கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகிலுள்ள குருமிலாங்குடி கிராமத்தில் புனித சுவக்கின் அன்னாள் தேவாலயம் உள்ளது. இங்கு 10 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி திருவிழா திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நிறைவு திருப்பலியும் நடைபெற்றது. திருவிழா நிறைவின் போது சப்பரப் பவனி நடைபெற்றது. முதல் சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதூதர், 2-ம் சப்பரத்தில் புனித பாத்திமா மாதா, 3-ம் சப்பரத்தில் புனித சுவக்கின் அன்னாள் ஆகியோரின் திரு உருவம் தாங்கிய சப்பரப்பவனி நடைபெற்றது. திருவிழா திருப்பலி ஆர்.எஸ். மங்களம் வட்டார அதிபர் அருட்பணி தேவசகாயம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா, அருட்தந்தை பிரபு, அருட்தந்தை குமார், கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் அருட்தந்தை இன்பென்ட் ராஜ், ஊடகப் பணிக்குழு செயலர் அருட்தந்தை அந்தோணி எட்வர்ட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி யை நிறைவேற்றினர். திருவிழா நிகழ்வுகளை அருட்சகோதரி மரிய கொரட்டி, கிரேசி, பிரிஸ்சில்லா, ரோசாரி ராணி மற்றும் பங்கு பேரவையினர் பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். மாலை சப்பரப்பவனி நிறைவு திருப்பலி கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.

Tags:    

Similar News