உள்ளூர் செய்திகள்

மாநாடு நடைபெற உள்ள இடத்தில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

முதல்-அமைச்சர் பங்கேற்பு: மண்டபத்தில் விழா பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2023-08-14 05:51 GMT   |   Update On 2023-08-14 05:51 GMT
  • முதல்-அமைச்சர் பங்கேற்பு: மண்டபத்தில் விழா பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  • பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி வருகிறார். அன்று ராமநாதபுரத்தில் நடக்கும் தி.மு.க. பாகமுகவகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மறுநாள் 18-ந் தேதி மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டை யொட்டி அங்கு விழா பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.100-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்டபம் முகாம் அருகே மணல்மேடாகவும், பள்ளங்களாகவும் இருந்த பகுதி முழுமையாக பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டது.அதோடு அந்த இடத்தில் இருந்த செடி,கொடிகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.இன்னும் மூன்று நாட்களுக்குள் விழா மேடை பந்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

Tags:    

Similar News