உள்ளூர் செய்திகள்

மீன்கள் காட்சிக்கூடம், மகளிர் குழு கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர்

Published On 2023-08-18 12:39 IST   |   Update On 2023-08-18 13:25:00 IST
  • மீன்கள் காட்சிக்கூடம், மகளிர் குழு கண்காட்சி அரங்கத்தை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.
  • ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி–களை வழங்கினார்.

மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடை பெற்ற மீனவர் நல மாநாட் டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து–கொண்டு மீனவர்கள் மற் றும் மகளிர் சுயஉதவிக்குழு–வினர் என 13 ஆயிரத்த 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி–களை வழங்கினார்.

முன்னதாக மாநாடு நடைபெறும் கலோனியர் பங்களாவுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன்கள் காட்சி கூடம், மகளிர் மேம்பாட்டு நிறுவ–னம் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங் குகள்,

மகளிர் சுய உதவிக்குழுவி–னர் தயாரித்த கைவினை பொருட்கள் அரங்கு, சிறு, குறு தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

Tags:    

Similar News