உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதையும், அதில் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை

Published On 2023-05-10 08:14 GMT   |   Update On 2023-05-10 08:14 GMT
  • அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 53 ஊராட்சி மன்றத்தலை வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதியளவு தண்ணீர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து வழங்க இயலாத சூழ்நிலை தற்பொழுது உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள நிலையை சரியாக மதிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வருங்கால சந்ததியினருக்கு தடையின்றி குடி தண்ணீர் கிடைத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News