உள்ளூர் செய்திகள்

கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டிட பணிகள் கடும் பாதிப்பு

Published On 2022-06-30 08:11 GMT   |   Update On 2022-06-30 08:11 GMT
  • கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டிட பணிகள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட த்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமை யாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.

கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்கு வதற்கு தயங்கி வருகின்றனர். கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பரிதவிக்கின்றனர்.

இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள கொத்தனார்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரி ஷியன் தொழில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News