உள்ளூர் செய்திகள்

பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா நடந்தது. 

பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா

Published On 2023-03-24 08:47 GMT   |   Update On 2023-03-24 08:47 GMT
  • பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
  • முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி-மாரிமுத்து ஆகியோரது மகன் முதுகலை பட்டதாரி சரண்குமா ருக்கும், பாப்பா குடி முருகன்-செல்வராணி ஆகியோரது மகள் பட்டதாரி ஷார்மிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.

இவர்களது திருமணம் நேற்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள்,முக்கிய பிரமுகர்கள், உற்றார்-உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பரக்கத் மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை மாரிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய லட்சுமி, சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர். மணவிழாவில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

Tags:    

Similar News