உள்ளூர் செய்திகள்

கியூப்களால் தான் உருவாக்கிய அப்துல் கலாம் உருவ வடி–வத்துடன் மாணவர் அப்துல்லா பான்ஞ்பயா 

கியூப்களை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவம் வடிவமைப்பு

Published On 2023-07-27 06:36 GMT   |   Update On 2023-07-27 06:36 GMT
  • 1,221 கியூப்களை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவம் வடிவமைக்கப்பட்டது.
  • மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே தங் கச்சிமடம் ஊராட்சி பகு–திக்கு உட்பட்ட பேய்க்க–ரும்பு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி–மண்டபம் அமைந்துள் ளது. இந்த மணிமண்டபத்தில் இன்று அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் கடை–பிடிக்கப்பட்டு வருகி–றது.

இதையொட்டி தமிழகத் தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதில் அவர்கள் செய்துள்ள சாதனைகளை விளக்கி மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பான்ஞ் பயா என்ற மாணவர் ராமே சுவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு போட் டிகளில் ஏராளமான சாத–னைகளை செய்துள்ளார்.

இந்த நிலையில் மாணவர் அப்துல்லா பான்ஞ் பயா, முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவப் படத்தையும் அவர் விஞ்ஞானியாக இருந்த–போது முதலில் ஏவிய அக்னி ஏவுகணையும் 1,221 ரூபிக்ஸ் கியூப்களை பயன்ப–டுத்தி வடிவமைத்துள்ளார்.

இந்த உருவ வடிவத்தை 4 மணி நேரத்தில் அவர் செய்து முடித்துள்ளார் என்பது உலக சாதனையா–கும். அவர் வடிவமைத்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவத்தை அப்துல் கலா–மின் மணிமண்டபத்தில் இன்று அவர் நினைவு தினத்தையொட்டி மண்டப வளாகத்தில் வைத்திருந்த–னர். இந்த உருவத்தை மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.

Tags:    

Similar News