உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன

Published On 2023-09-26 08:17 GMT   |   Update On 2023-09-26 08:17 GMT
  • ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
  • துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 512 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகையாக 2 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 2 பயனாளி களுக்கு சலவை பெட்டி களும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News