உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.

கபடி போட்டியில் 43 அணிகள் பங்கேற்பு

Published On 2023-05-25 08:45 GMT   |   Update On 2023-05-25 08:45 GMT
  • கமுதி அருகே நடந்த கபடி போட்டியில் 43 அணிகள் பங்கேற்றனர்.
  • சாமிபட்டி அணி முதல் பரிசை பெற்றது.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்த கோட்டை கிராமத்தில், ஆண்டுதோறும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கபடி போட்டி நடத்தப்படும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த ஆண்டு 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், லக்கி கார்னர் உள்பட பல போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள்,பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு பணியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

எஸ்.ஆர்.எம். கபடி குழுவினர் நடத்திய கபடி போட்டியில் சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, ஆலங்குளம், கலையூர், ஏனாதி ஆகிய கிராமங்கள் உட்பட ஏராளமான பகுதியிலிருந்து 43 கபடி அணிகள் பங்கேற்றன. போட்டியில் சாமிபட்டி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

இந்த அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த சேர்ந்த கோட்டை எஸ்.ஆர்.எம். "பி" அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். "ஏ" அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், 4-ம் இடம் பிடித்த ஆலங்குளம் அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News