காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெய்த மழை அளவு
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நேற்று நள்ளிரவு முதல் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், செம்பரம்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, ஒளி முகமது பேட்டை, ரங்கசாமி குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
காலையில் பலத்த மழை கொட்டியதையடுத்து இன்று காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வாலாஜாபாத்தில் 22 மி.மீட்டர், உத்திரமேரூரில் 5 மி.மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 19 மி.மீ., குன்றத்தூரில் 36.6 மி.மீ, செம்பரம்பாக்கத்தில் 30.6 மி.மீ மழை பெய்து உள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக 38.4 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
செங்கல்பட்டு-28.4 மி.மீ
மதுராந்தகம்-10 மி.மீ
செய்யூர்-32.5 மி.மீ
தாம்பரம்-37.6 மி.மீ
மாமல்லபுரம்-16 மி.மீ
கேளம்பாக்கம்-2 மி.மீ
திருக்கழுக்குன்றம்-38.4 மி.மீ
திருப்போரூர்-5 மி.மீ.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டித்தீர்த்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.