உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கீழே சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

கண்டமங்கலம் பகுதியில் மழை-சூறைக்காற்று: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

Published On 2022-12-18 07:27 GMT   |   Update On 2022-12-18 07:27 GMT
  • கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன.
  • இதனால் சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

விழுப்புரம்:

பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள் நிறைம்பின. தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன. இதனால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சிறுவந்தாடு, அகரம், ஆண்டியார் பாளையம் மேடு, பஞ்சமாதேவி, மோட்சகுளம், பரிசுரெட்டி பாளையம், கள்ளி ப்பட்டு, வடவா ம்பலம், பூவரசன்குப்பம், கொங்கம்பட்டு, வீராணம், சொரப்பூர், மேல்பாதி, கீழ்பாதி, கலிஞ்சிக்குப்பம், கிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், பட்ட ரைபாதி, பேரிச்சம்பாக்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையாலும் சூறைக்காற்றாலும் கீேழ சாய்ந்து சேதமாகி உள்ளது. மேலும் தற்போது உரு வாகியுள்ள குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல த்தின் காரணமாக மழை பெய்தால் மடிந்த நெற்பயிர்கள் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

Tags:    

Similar News