உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில் மழை நீடிப்பு சேலம், ஓமலூரில் கன மழை அதிக பட்சமாக 33.4 மி.மீ. பதிவு

Published On 2022-08-03 08:28 GMT   |   Update On 2022-08-03 08:28 GMT
  • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

கன மழை

சேலம் மாநகரில் அஸ்தம்–பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்ட––லாம்பட்டி உள்பட பல பகுதிகளில் நேற்று மாலை கன மழை கொட்டி–யது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம் புறநகர்

இதேபோல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஓமலூர், ஆத்தூர், வீரகனூர் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

ஏற்காட்டில் நேற்று பெய்த மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

99.60 மி.மீ. மழை

மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலத்தில் 33.4 மி.மீ. மழை பெய்துள்ளது. ஓமலூர் 17.9, ஆத்தூர் 16, வீரகனூர் 12, ஏற்காடு 9, தம்மம்பட்டி 4.6, காடையாம்பட்டி3, ஆனைமடுவு 2, கரியகோவில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 99.60 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலை–யும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

Tags:    

Similar News