உள்ளூர் செய்திகள்
பேராலய கொடியேற்றம் நடந்தது.
தூய அலங்கார அன்னை பேராலய திருவிழா கொடியேற்றம்
- ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கும்பகோணம் காமராஜர் சாலை மற்றும் பேராலயத்தை சுற்றி கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதனை தொடர்ந்து மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிலோமின்தாஸ் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.