உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள்.

போடி பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு

Published On 2023-09-30 05:02 GMT   |   Update On 2023-09-30 05:02 GMT
  • போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
  • புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது ஸ்ரீனிவாச பெருமாள் கோவில். இந்து அறநிலையத்துறையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவில் ஜமீன்தார் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.

இங்கு அனைத்து வைணவ சிறப்பு விசேஷ நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் தனிப் பிரகாரத்தில் உள்ள பத்மாவதி தாயாருக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News