உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஐ.க.வினர் மீது வழக்கு

Published On 2023-10-10 11:54 IST   |   Update On 2023-10-10 11:54:00 IST
  • கறம்பக்குடியில் 26-வது நாளாக தொடரும் போராட்டம் பா.ஐ.க.வினர் மீது வழக்கு
  • போதிய டாக்டர்கள் நியமித்து, 24 மணி நேர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வலியுறுத்தியும்

 கறம்பக்குடி 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் நியமித்து, 24 மணி நேர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வலியுறுத்தியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைதலைவர் ஜீவானந்தம் தெற்கு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தேசிய தென்னை வாரிய உறுப்பினர் பண்ண வயல் இளங்கோவன் மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும் மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் அருண், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ குருராம், மாவட்டத் துணைத் தலைவர்கள் தியாகராஜன், செல்லத்துரை, கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் தவமணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News