உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

Published On 2023-07-11 11:48 IST   |   Update On 2023-07-11 11:48:00 IST
  • புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
  • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்கள்.வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை, மளிகை கடை, உணவகம், தையற்கடை, ஜெராக்ஸ்கடை, பாலகம் உள்ளிட்டவைகளை அமைக்க ரூ.8.40 லட்சம் மதிப்பில்நுண்நிறுவன நிதிக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட செயல் அலுவலர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்உலகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News