- புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடைபெற்று வருகிறது
- 4-ம் நாளில் நற்றமிழ் முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் கம்பன் பெருவிழா 10 நாள் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இதன் நான்காவது நாள் நிகழ்ச்சி நேற்று இரண்டு அமர்வுகள் இணைத்து நடத்தப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கலந்துக் கொண்டு எழுச்சி உரையாற்றுவதாக இருந்தது. அவர் பெங்களுரில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்ற காரணத்தினால் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அதனால் இரண்டு அமர்வுகளையும் இணைத்து ஒன்றாக நடத்தப்பட்டது. சென்னையை சேர்ந்த நாராயணன் மானுடத்தின் மகத்துவங்கள் என்ற தலைப்பிலும், முனைவர் அப்துல் சமது கம்பனில் சமூக அழகியல் என்ற தலைப்பிலும், முனைவர் கலியபெருமாள் ஏழை ஏதலன் என்ற தலைப்பிலும் நற்றமிழ் முற்றத்தை சிறப்பாக கொடுத்தனர் .நிகழ்ச்சியல் தமிழ் ஆசியர் கழக தலைவர் திருப்பதி, ஆர்த்தி ஹோட்டல் குமரகுரு, கட்டுனர் சங்க மாவட்ட தலைவர் தாமரைச் செல்வம், மாவட்ட வர் த்தக கழக துணைத்தலைவர் அசரப் அலி, சிறு தொழில் அதிபர் கள் சங்கம் தலைவா; ராஜ்குமார் , தொல்லியியல் ஆய்வு கழக இணைச் செயலாளர் பீர்முகமது, மதுரை வழக்கறிஞர் இருளப்பன், மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சவரிமுத்து, அறந்தாங்கி வர் த்தக சங்க தலைவர் காமராஜ், ஆலங்குடி மனமோகன், திருக்குறள் கழக தலைவர் ராமையா ஆகியோருக்கு பொ ன்னாடை அணிவிக்கப்பட்டு துணை த்தலைவர் முருகப்பனால் கௌரவிக்கப்பட்டனர் நன்றியுரையை சேது கார் த்திகேயன், லெட்சுமி அண்ணாமலை ஆற்றினார் கள். நிகழ்ச்சியில் கவுன்சில் சுப.சரவணன், செந்தாமரை பாலு, கம்பன் கழக நிர் வாகிகள் பொருளாளார் கோவிந்தராசன், துணைத்தலைவர் எம்.ஆர் .எம்.முருகப்பன், துணை பொருளாளர் ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர் கள் முருகையன், காடுவெட்டி குமார், கருணாகரன், டாக்டர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்