உள்ளூர் செய்திகள்

கம்பன் கழக விழா தொடக்கம்

Published On 2023-07-15 11:58 IST   |   Update On 2023-07-15 11:58:00 IST
  • புதுக்கோட்டையில் கம்பன் கழக 48-வது ஆண்டு விழாவிற்கான தொடக்கவிழா நடைபெற்றது.
  • அமெரிக்காவின்  மேரி லேண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத்துறை  துணை செயலர் நடராஜன் பங்கேற்பு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது  ஆண்டு கம்பன் விழாவின்,  தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, அமெரிக்காவின்  மேரி லேண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத்துறை  துணை செயலர்ராஜன் கே. நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசும்போது,  18 -ஆம் நூற்றாண்டிலேயே என்றைக்கும் மனித குலத்துக்குத் தேவையான முத்தான கருத்துகளைத் தொகுத்து ராமாயணத்தைப் படைத்திருக்கிறார்.  கம்பன் ராமாயணத்தை ஓர் இலக்கியமாக மட்டுமே படைக்கவில்லை. மாறாக,மக்களின் வாழ்வியலுக்கான காவியமாக ராமாயணத்தைப் படைத்திருக்கிறார்.  ராமாயணத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். உலகெங்கும் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

புதுச்சேரி கம்பன் கழகச் செயலரும் முன்னாள் பேரவைத் தலைவருமான வே. பொ.சிவ க்கொழுந்து பேசும்போது, உலகெங்கும் கம்பன் விழாக்கள் ஏதோ சம்பிராதயமாகவோ, மகிழ்ச்சிக்காகவோ நடத்தப்படுவதில்லை. சான்றோர்களை மரியாதையாக நடத்தும் பாங்கு எதுவும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.  இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அறிவியலை அறிந்திருக்கிறார்கள்,ஆனால்,அறிவால் நிறைந்திருக்கிறார்களா என்றால் இல்லை. இதனை மாற்றுவதற்காகத்தான் கம்பன் விழாக்கள் உலகெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் . கள்ளிப்பட்டி கம்பன் கழகத் தலைவர் கா.கு.கார்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ. ராஜ்மோகன்,டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதைத்தொ டர்ந்து 'கம்பன் யார்?' என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்குக்கு இலங்கை ஜெயராஜ் தலைமை வகித்தார். 'கம்பன் மனிதனே' என்ற தலைப்பில் பே.சே. சுந்தரம்,'கவிஞனே' என்ற தலைப்பில் கு. பாஸ்கர்,'சித்தனே' என்ற தலைப்பில் ரா. சம்பத்குமார் ஆகியோரும் பேசினர்.  

Tags:    

Similar News