உள்ளூர் செய்திகள்
ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
- ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது ெசய்யப்பட்டார்
- வாகன சோதனை நடத்தி வந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி தனிப்படை போலீசார் நகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆடு திருட்டில் ஈடுபட்டவர் வெட்டன்விடுதி அருகே நின்று கொண்டிருந்த சதீஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செ ய்து மழையூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.போலீசார் விசா ரித்தபோது பொன்னன் விடுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக ஒப்பு க்கொண்டதின் பேரில் மழையூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.