உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு

Published On 2023-08-16 13:15 IST   |   Update On 2023-08-16 13:15:00 IST
  • மணமேல்குடி கோடியக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடைபெற்றது
  • 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்

அறந்தாங்கி,

அமாவாசை தினம் என்பது சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் தினமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆண்டில் வருகிகிற ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை முக்கியமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தன்று பித்ருலோகத்திலிருந்து முன்னோர்கள் தங்கள் சந்ததிகளை பார்க்க புறப்படுவதாகவும், புரட்டாசி அமாவாசையன்று பூமியை வந்தடைவதாகவும் பின்பு தை அமாவாசையன்று மீண்டும் பித்ருலோகத்திற்கு சென்று விடுவதாகவும் ஐதீகம் உள்ளது. அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மணமேல்குடி கோடியக்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் கடலில் நீராடி தங்களது முன்னோர்களை வேண்டி எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்பணம் செய்தனர். நிகழ்வில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News