கந்தர்வகோட்டையில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி
- கந்தர்வகோட்டையில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழஙகப்பட்டது
- மழை காலங்களிலும், ஏரியில் நீர் நிரம்பும் போதும் இவர்கள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைவார்கள்
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே நரிக்குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நாவல் ஏரியில் கடந்த 10 ஆண்டுகளாக நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் போட்டு வசித்து வருகின்றனர். மழை காலங்களிலும், ஏரியில் நீர் நிரம்பும் போதும் இவர்கள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைவார்கள்.
நிரந்தர குடியிருப்பு பகுதி கேட்டு அரசுக்கு கோரிக்கை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்திய திருச்சபை திருச்சி, தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சி தூய பவுல் ஆலயத்தின் ஆயர் மணிமாறன் தலைமையில் திருச்சபை மக்கள் குழுவாக வந்து 70 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சாவூர் சேர்ந்த ஆயர்கள் மற்றும் கந்தர்வகோட்டை எட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.