உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-04-16 11:24 IST   |   Update On 2023-04-16 11:24:00 IST
  • பொன்னமராவதியில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வர்த்தக மஹாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசும்போது, 57 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 31 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும் (முழுப்புலம்), 7 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும் (உட்பிரிவு) என ஆகமொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புடைய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடை க்கலமணி, இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூ ராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர்வெங்கடேசன், வட்டாட்சியர் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து, தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கீதா சோலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News