உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்
- கந்தர்வகோட்டையில் வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.
- முகாமில் 18 வயதில் நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மற்றும் ஆதார் எண் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான 375 மனுக்கள் முகாம் அலுவலர்களால் பெறப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 88 வாக்கு சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் 18 வயதில் நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மற்றும் ஆதார் எண் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான 375 மனுக்கள் முகாம் அலுவலர்களால் பெறப்பட்டது.
வாக்கு சாவடி மையங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பாளர் வள்ளலார், கோட்டாட்சியர் செல்வி, புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் கருணாகரன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, தாலுகா தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தனர்.