திருமயம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- திருமயம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் திருமயம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் மணவாளன்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.அப்போது அவர் பேசுகையில் ஜல்ஜீவன் திட்டத்தில் நான் ஒப்பந்தகாரரிடம் லஞ்சம் கேட்டதாக ஒரு ஆடியோவை வெளியிட்டனர். அதே போல் யாரோ பேசியதை தனியார் தொலைகாட்சிகளிலும் தவறான அடிப்படையில், ஆதாரமற்ற பொய்யான, தகவலை ஒப்பந்தகாரர்கள் பரப்பி வருகின்றனர்.
அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஊராட்சி மன்ற அலுவலகம் தினந்தோறும் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பொது மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்த தீர்த்து வருகிறது. நாங்கள் வருவதற்கு முன்னர்இருந்த ஊராட்சி மன்றம் தற்போது எப்படி உள்ளது என்று 8 குக்கிராமங்களை உள்ளடக்கிய அனை வருக்கும் தெரியும். மேலும் என் மீது ஒரு பி.சி.ஆர். வழக்கு, 65 புகார்மனுக்கள் என அனைத்தையும் பார்த்து வருகிறேன்.
என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் இங்கேயே புளியமரத்தில் தூக்குமாட்டி உயிரை விட தயார் என்றார். இந்த பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், மற்றும் மன்றம் உறுப்பினர்கள், காவல் துறையினர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., பொதுமக்கள் ஏராளமானனோர்கலந்துக் கொண்டனர்.