திருமாவளவன் பேனர் அகற்றியதால் வி.சி.க.வினர் சாலை மறியல்
- திருமாவளவன் பேனர் அகற்றியதால் வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் பல்ேவறு இடங்களில் திருமாவளவனின் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மட்டங்கால் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த திருமாவளவன் பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் தூக்கி சென்று விட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை அக் கட்சியினர் பிளக்ஸ் பேனர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள கட்சியினருக்கு பரவியது.
உடனே அவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் மட்டங்கால் பேருந்து நிறுத்தம் அருகே மாநில துணைத்தலைவர் வீர விடுதலை வேந்தன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் காரர்கள், திருமாவளவன் பிளக்ஸ் பேனர் திட்டமிட்டு அகற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படுவது வாடிக்கையாக நிகழ்கிறது என குற்றஞ் சாட்டினர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராஜ் பிளக்ஸ் பேனர் அகற்றியவர்கள் மீது உரிய நடவடிகை எடுகக்ப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.