உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-03 12:37 IST   |   Update On 2022-11-03 12:37:00 IST
  • போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது
  • மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து நடைபெற்றது

புதுக்கோட்டை:

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தில் அமல்படுத்த அவசரப்பட கூடாது. ஸ்பாட் பைன் முறையை கைவிட வேண்டும். சட்டத்தின் பெயரால் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்த சொல்லி துன்புறுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொது செயலர் ரெத்தினவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் அன்புமணவாளன் சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சாகுல்அமீது, ஜகுபர்அலி, அப்பாஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் , பாண்டியன், அடைக்கலசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Tags:    

Similar News