புதுக்கோட்டையில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம்
- புதுக்கோட்டையில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
- முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய கோரிக்கைகள் அடங்கிய 4 மனுக்களை திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இந்தியன் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் திருநங்கைகளுக்கான இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சியினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி துவக்கி வைத்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.