உள்ளூர் செய்திகள்

சாந்தநாத சாமி கோவிலில் தெப்ப உற்வசம்

Published On 2023-03-08 06:26 GMT   |   Update On 2023-03-08 06:26 GMT
  • மாசி மக திருவிழாவையொட்டி நடைபெற்றது
  • மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை,

மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் சாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் தெப்ப உற்சவம் பல்லவன் குளத்தில் நடைபெற்றது. இதில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா நடைபெற்றது. சாமி தரிசனத்திற்காக பல்லவன் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தெப்பம் வலம் வரும்போது பக்தர்கள் சிவ, சிவா... என பக்தி கோஷமிட்டனர். தெப்பம் கரையை வந்தடைந்ததும் சாமி புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் எழுந்தருளினர். கீழ ராஜ வீதி உள்பட நான்கு வீதிகளிலும் சாமி வீதி உலா நடைபெற்றது.இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில்,தி ருவேங்கைவாசல் சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News