உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி பொன்னன்விடுதியில் அரசு பள்ளியின் முகப்பு சுவர் இடிந்து விழுந்தது

Published On 2022-10-30 14:45 IST   |   Update On 2022-10-30 14:45:00 IST
  • பொன்னன்விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்
  • இந்தப் பள்ளியின் முகப்பு பகுதி நேற்று மாலை திடீரென்று பெயர்ந்து விழுந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்

இப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் முகப்பு பகுதி நேற்று மாலை திடீரென்று பெயர்ந்து விழுந்தது. நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மேலும் இதேபோல் கறம்பக்குடி ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு களபம் அரசு பள்ளி இடிந்து விழுந்து மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராங்கியன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதேபோல் தொடர்ச்சியாக பள்ளி கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். எனவே தமிழக அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News