பா.ஜ.க.சார்பில் மக்கள் குறைகேட்பு முகாம்
- பா.ஜ.க.சார்பில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
- நலத்திட்ட விழிப்புணர்வும் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபி மன்யு முருகேசன் தலைமையில், மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு மற்றும் குறைகேட்பு முகாம் ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் செல்வம், அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு ஆலங்குடி டவுன் மற்றும் ஆலங்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து மத்திய அரசின் நலத்திட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை மனுக்களை அளித்துள்ளனர்.
இதில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப அட்டைகளில் உள்ள முன்னுரிமை இல்லாத அட்டைகளை முன்னுரிமை உள்ள அட்டைகளாக மாற்றி தர வேண்டியே பெரும்பாலான விண்ணப்பங்கள் இருந்தன என்று தெரிவித்தனர்.