உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2023-03-06 11:02 IST   |   Update On 2023-03-06 11:02:00 IST
  • வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்றது
  • வங்கி கணக்கு வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை,

வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் S ரகுபதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பாஜகவினர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளிகளுடன் மோதல் என வதந்தியை பரப்பி வருவதாகவும், வதந்தியை பரப்புவோர் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து இரும்புக்கரம் கொண்டு அடக்கிய ஒரே முதல்வர் தமிழக முதல்வர் என்று பேசினார்.பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆர். எஸ். பாரதியை பார்த்தால் அதிமுகவிற்கு பயம், ஜெயலலிதா இறப்பில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,இரண்டு அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதில் ஒருவர் அறிக்கையில் இடைக்கால தடை வாங்கி உள்ளார், இருந்தாலும் தடையை நீக்கி தப்பு செய்தவர்களை குற்றவாளியாக மக்கள் மன்றத்தில் நிறுத்திக் காட்டுவார் தமிழகம் முதல்வர் என்றார். இறுதியாக பேசிய ஆர் எஸ் பாரதி கூறுகையில் இந்தியாவில் 10 லட்சம் கோடியை கொள்ளையடித்து வைத்துள்ளார்கள், அந்த மூன்று நபர்கள் மோடி,அதானி,அம்பானி, பணம் மதிப்பிழப்பு 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது என்று சொன்னது போல் வங்கிகளும் திவாலாகி விட்டது என்று கூறி வங்கியையும் இந்தக் கூட்டம் மூடிவிடும் எனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன், கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, வடக்கு மாவட்டச் செயலாளர் கேகே செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம்சண்முகம், நகரச் செயலாளர் ராஜேந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து, மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர் நந்தினிகண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News