உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

Update: 2023-03-24 06:03 GMT
  • மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • தேர்வு எழுத விருப்பமில்லாமல் விபரீதம்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் தரணியா (வயது17). இவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுத விருப்பமிலலை என்று கூறிவந்துள்ளார். தேர்வு இன்று (24-ந் தேதி) தொடங்க உள்ள நிலையில் நேற்று மாலை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News