உள்ளூர் செய்திகள்

ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Published On 2023-03-14 12:02 IST   |   Update On 2023-03-14 12:02:00 IST
  • லியோனி கலந்து கொண்டு பேசினார்
  • ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்பு

ஆலங்குடி,

புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு,க சார்பில் செம்பட்டிவிடுதியில், கழகத் தலைவர் தமிழக முதல்வர் தளபதி 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்கூட்டத்திற்கு நகைச்சுவைத் தென்றல் மற்றும் கொள்கை பரப்பு செ யலாளர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. திண்டுக்கல் ஐ.லி யோனி உரையாற்றியானார். நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ்வரி ஒன்றியச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன் தவ.பாஞ்சாலன் சாமிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News