உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் சேமிப்பு தின விழா
- அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் சேமிப்பு தின விழா நடைபெற்றது
- மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது
கந்தர்வக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிக்கன மற்றும் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியை சிந்தியா அனை வரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி அஞ்சலகத்தின் கிளை அஞ்சல் அலுவலர் மோகன்தாஸ் மாணவர்கள் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரமேதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்விஜாய் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.