உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

Published On 2023-08-12 13:55 IST   |   Update On 2023-08-12 13:55:00 IST
  • கந்தர்வகோட்டையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
  • தொடர் விபத்துகளும் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலையின் நடுவே உயரம் கூடியும், சாலையின் இருமருங்கிலும் பள்ளம் ஏற்படும், உயரம், தாழ்வு கொண்ட சாலையாக மாறி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள், பேருந்துகளில் இருந்து இறங்கும் முதியவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் தொடர் விபத்துகளும் நடக்கிறது.எனவே பயணிகள் ,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று கந்தர்வகோட்டை வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News