கூடுதல் அலுவலர்கள் நியமிக்க கோரிக்கை
- கலைஞர் மகளிர் உரிமை திட்ட கள ஆய்வுக்கு கூடுதல் அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது
- கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ேவண்டுகோள் விடுத்துள்ளது
புதுக்கோட்டை ,
தமிழ் நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அரங்க . வீரபாண்டியன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தமிழ் நாடு முழுவதும் முழு வேகத்தோடு செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் மனுக்கள் பெறும் முகாம் களில் முகாம் அலுவலர்களாகவும் தற்பொழுது களத்தில் ஆய்வு அலுவலராகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் கணினியில் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுபவர்கள் எனவும்,
சொற்ப எண்ணிக்கையிலான மனுக்கள் மட்டுமே கள ஆய்வு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அதிகப்படியான மனுக்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் கடினமான கள ஆய்வுப் பணியில் அன்றாட பணிகளுக்கு இடையில் ஒரு கள ஆய்வு அலுவலர் ஒரு நாளைக்கு 25 மனுக்கள் மட்டுமே கள ஆய்வு செய்ய இயலும்.
ஆனால் தற்போது 200க்கும் அதிகமான மனுக்கள் கள ஆய்வு செய்ய வேண்டி இருந்தால் கூடுதலாக ஒரு கள ஆய்வு அலுவலர் நியமிக்க வேண்டும்.
கிராமங்களில் இணையவசதி இல்லாத போது ஜிபிஎஸ் வழியாக கண்காணித்து நெருக்கடி கொடுக்கப்படுவதோடு பயனாளிகள் எதிரிலேயே தகுதியானவரா, , தகுதியற்றவரா என நிர்ணயம் செய்வது இயலாத காரியமாகவும் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று ஒரு தாக்குதல் சம்பவம் கிராம நிருவாக அலுவலர் மீது நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.