உள்ளூர் செய்திகள்

மருத்துவதுறையில் புதுக்கோட்டை முன்னோடியாக திகழ்கிறது - கலெக்டர்

Published On 2022-11-20 11:55 IST   |   Update On 2022-11-20 11:55:00 IST
  • மருத்துவதுறையில் புதுக்கோட்டை முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
  • நூற்றாண்டு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், நூற்றாண்டு விழா, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றிப்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கலெக்டர் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கும் உயர் தரத்திலான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவத்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பான முறையில செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது. இதற்கு காரணமான மருத்துவர் கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர் கள் அனைவருக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், நூற்றாண்டு விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவர்கள் அனைவரும் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News