புதுக்கோட்டை ஆறாவது புத்தகத் திருவிழா-ஆட்டோ பிரச்சார பதாதைகள் வெளியீடு
- புதுக்கோட்டை ஆறாவது புத்தகத் திருவிழா-ஆட்டோ பிரச்சார பதாதைகள் வெளியிடபட்டுள்ளது
- புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இணைந்து புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவின் வரவேற்புக்குழு தலைவராக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செயல்படுகிறார். மாவட்ட காவல் சூப்பிரெண்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர்களைக் கொண்ட வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கவிஞர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசுத் துறைகளோடு இணைந்து விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் புத்தகத் திருவிழா விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்டோ பிரச்சார பதாகைகளை வெளியிட்டு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
இதில் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பளார்கள் தங்கம் மூர்த்தி, ஆர்.ராஜ்குமார், அ.மணவாளன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், ஈ.பவனம்மாள், ஜீவி மற்றும் வரவேற்புக்குழுவினர் கவிகார்த்திக், யோகா பாண்டியன், கராத்தே கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி, நூலகங்கள், பொதுமக்கள் கூடும் ஆயிரக்கணக்கான இடங்களில் லட்சக்கணக்கில், தொடர்ந்து ஒரு மணி நேரம் புத்தகங்கள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்