உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் கோரிக்கையை நிறைவேற்றி தந்த அமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு

Published On 2023-04-07 12:49 IST   |   Update On 2023-04-07 12:49:00 IST
  • ஆலங்குடியில் கோரிக்கையை நிறைவேற்றி தந்த அமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
  • கொத்தக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூ. 25.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ அமைய உள்ளது.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூ. 25.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ அமைய உள்ளது. பல ஆண்டு கோரிக்கையில் ஆலங்குடி தொகுதி கீழாத்தூர் பகுதியில் புதிய கலை அறிவியல் கல்லூரியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பெற்று தந்ததுபோல அதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு 2000 பேர் வேலைவாய்ப்பு பெரும் வகையில் சிட்கோ தொழிற் பேட்டை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதலமைச்சருக்கும், இளைஞர் நலன் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் கொத்தகோட்டை ஊராட்சி மற்றும் அப்பகுதி சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பேரூராட்சி கவுன்சிலர்கள், நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் ஒன்றிய தி.மு.க.வினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News