உள்ளூர் செய்திகள்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம்

Published On 2022-07-08 11:33 IST   |   Update On 2022-07-08 11:33:00 IST
கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடந்தது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தினைக் கண்டித்து, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் எரிவாயு உருளைக்கு ஒப்பாரி வைத்து, கும்மியடித்து சுடுகாட்டிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் அமுதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவர் சுசீலா முன்னிலை வகித்தார். அப்போது மத்திய மோடி ஆட்சியில் நாளுக்குநாள் விலைவாசி உயர்வு வின்னை முட்டுகிறது. நாளுக்கு நாள் எரிவாயு உருளையின் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி பதவியேற்கும் போது ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ650 இருந்தது. தற்போது 1150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எனவே சமையல் எரிவாயு உருளையின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் எரிவாயு உருளைக்கு ஒப்பாரி வைத்து அழுதும்,கும்மியடித்தும், அதனை தொடர்ந்து சுடுகாட்டிற்கு அனுப்பும் நூதன போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் நாகூரம்மாள், மவட்டச் செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News