உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை-கலெக்டர் உத்தரவு

Published On 2022-08-30 12:12 IST   |   Update On 2022-08-30 12:12:00 IST
  • பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்
  • குறைதீர் கூட்டம் நடந்தது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 295 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,500 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News