உள்ளூர் செய்திகள்

ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் மனு

Published On 2022-09-16 13:40 IST   |   Update On 2022-09-16 13:40:00 IST
  • ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்
  • இந்து மதத்தை இழிவாக பேசியதற்கு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக காவல் நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அனி ஆடிட்டர் ராஜா தலைமையில், மாவட்ட அமைப்புசாரா பதிவு பொறுப்பாளர் குமார் மற்றும் வர்த்தக பிரிவு துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினியிடம் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆராசா எம்.பி. இந்து மதத்தையும், இந்து மத மக்களையும், இந்து மத நம்பிக்கையையும் பற்றி தொடர்ந்து இழிவாகவும், அவமரியாதையாகவும், இந்து மத மக்களுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.இந்தியாவில் இருக்க கூடிய ஒட்டுமொத்த இந்த்துக்களையும் கொச்சை படுத்தும் விதமாக இழிவுபடுத்தி அறுவெறுக்கத்தக்க வார்த்தைகள் மற்றும் சர்வமத மக்களிடையேயான நல்லிணக்கத்தையும், நாட்டின் அமைதியையும் சீர்குலைக்கும் விதத்தில் தொடர்ந்து ஆ.ராசா பேசிவருகிறார்.எனவே இவர்மீது தண்டனைகுரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

Tags:    

Similar News