தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி
- தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அன்னவாசல் பேரூராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அன்னவாசலில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் அன்னவாசல் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று மக்கள் இயக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கீர மங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, கூட்டுறவு சொசைட்டி வழியாக வளமீட்பு பூங்காவில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு குப்பைகளை மக்கும் மக்காதவை என பிரித்தெடுக்கும் முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள் ,அலுவலகர்கள் ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.