உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மூதாட்டி கைது
- பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்
- கோவில் விழாவில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பழமை வாய்ந்த மாமுண்டிக்கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் கருப்பையா மனைவி மாரிக்கண்ணு (வயது 55.) தரிசணம் செய்த ே பாது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை , ஒரு பெண் பறிக்க முயன்றார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி (வயது 68 ) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை நடத்தினர், பின்னர் ஆலங்குடி மாவட்ட உரிமையி யல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.