உள்ளூர் செய்திகள்

கொத்தமங்கலத்தில் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரி சம்மதம்

Published On 2022-08-31 12:09 IST   |   Update On 2022-08-31 12:09:00 IST
  • கொத்தமங்கலத்தில் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரி சம்மதம் தெரிவித்தார்.
  • மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் எதிரொலி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் மேற்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால், அவகைள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வகுப்பறைகள் மரத்தடியிலும் வேறு கட்டிடத்திலும் வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அடிக்கடி மழை மற்றும் பலத்த காற்று அவ்வப்போது வீசுவதால் கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிலவிவருகிறது. எனவே இந்த கட்டிடத்தை இடிக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோ என்று பள்ளி முன்பு ஒரு மரத்தடியில் அமர வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பள்ளிக்கட்டிடம் விடுமுறை நாளான இன்று அகற்றப்படும் எனவும், பள்ளியின் மற்ற குறைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி அதற்கான தீர்வுகள் எட்டப்படும் என உறுதி அளித்தார். இதில் சமாதானமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்ததோடு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News