கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி
- பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றனர்
- கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுத்தோப்பு மற்றும் திருப்பக் கோவிலில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் இப்பகுதியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இது குறித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி எம்.எல்.ஏ., மின்சாரத்துரை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அப்பகுயில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார்.மேலும் இருங்களன் விடுதி மற்றும் ராகியன்விடுதியில் பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை பார்வையிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியினை ஒதுக்கி கட்டிடத்தை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான முத்துகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெற்றி வேந்தன், சமூக ஆர்வலரும் ஆசிரியருமான அப்பு வடக்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரமுத்து, அன்பழகன், பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.