உள்ளூர் செய்திகள்

ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்

Published On 2023-11-18 06:27 GMT   |   Update On 2023-11-18 06:27 GMT
மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம்

ஆலங்குடி,  

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1 8 வகுப்பறையுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளிடம் அவர் பேசுகையில்:-

மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டப்பட உள்ளது. சுமார் 50 ஆண்டு காலத்திற்கு கட்டிடம் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கட்டப்படும். மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வகுப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு நல்ல முறையில் படித்து உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ரவி, ஊராட்சி தலைவர் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா ராணி, சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருண் ஜார்ஜ், வெங்கடேஷ், ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News